...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Saturday, September 30, 2006

இதய ஒளி

எப்போதும் போல் நான் என் அறையில்
உட்கார்ந்து கிறுக்கி கொண்டிருந்தேன்
house owner பையன் அருண், மாமா என்று
கூவி கொண்டே மேலே வந்தான்

நான் கிறுக்கி கொண்டிருந்த diaryயை பார்த்து
இது என்ன மாமா என்று
heart symbol யை பார்த்து கேட்டான்
என்னுடைய இதயம் என்றேன்
அப்ப நீங்களும் என்னை மாதிரி தானா என்றான்

என்னடா உளர்ரே
doctor தான் மாமா சொல்லிகிட்டு இருந்தாரு
என் இதயத்தில ஒட்டை இருக்காம்
இன்னிக்கி paperல கூட என் photo
வந்துச்சே நீங்க பாக்கலயா...

அன்றைய நாளிதழையை
பிரித்து பார்த்தேன்...
யாரோ என்னை ஓங்கி
அறைவது போல் இருந்தது

அடிபாவி...
உன்னுடன் shopping சென்று
அதற்காக செலவழித்தது
எவ்வளவு... எவ்வளவு

உன்னுடன் restaurant களுக்கு சென்று
அதற்காக செலவழித்தது
எவ்வளவு... எவ்வளவு

உனக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டுமென்று
நான் வாங்கியது
எவ்வளவு... எவ்வளவு

உன்னை கொண்டு ஊர் சுற்ற வேண்டுமென்று
என் இரண்டுசக்கர வண்டிக்குள் நான் போட்டது
எவ்வளவு... எவ்வளவு

இவ்வளவும் செய்த
எனக்கு நீ
டாடா காட்டிவிட்டு போய்விட்டாய்

பிறகு...
உன்னை மறக்க வேண்டுமென்று
நான் சிகரெட், மது, அது, இது
எவ்வளவு... எவ்வளவு

உனக்காக நான் செய்த செலவுகளை
கூட்டி கழித்து பார்த்தால்
இதோ எதுவும் தெரியாமல் நிற்கிறானே
அருண் இவனை போல எத்தனையோ
அருணின் வாழ்கையில்
ஒளி ஏற்று இருக்கலாம்

இது தெரியாமல் நான்
நீ என்னை விட்டு போய்விட்டதால்
என் இதயம் காலியாகி விட்டது என்று
எவ்வளவு... எவ்வளவு மடதனமாக

எதுக்கு மாமா இத எல்லாம் எரிக்கிறீங்க
இனி இதுக்கு அவசியமில்லை
வேற வேலை இருக்கு
என்ன வேலை மாமா
இனி பல பேருடைய வாழ்கையில்
ஒளி ஏத்தனும்...



Friday, September 29, 2006

பேசாம???

அவள் ரோஜாபூவை பார்த்து
நின்று கொண்டிருந்தாள்
நான் பேசாம ரோஜாபூவா பிறந்திருக்கலாம்

அவள் மழையை ரசித்து
கொண்டு நின்றாள்
நான் பேசாம மழையா பிறந்திருக்கலாம்

அவள் cell ph.ல்
பேசி கொண்டேயிருந்தாள்
நான் பேசாம cell ph.ஆ பிறந்திருக்கலாம்

அவள் நிறைய புத்தகங்களை
வாசித்து கொண்டேயிருந்தாள்
நான் பேசாம புத்தகமா பிறந்திருக்கலாம்

அவள் எழுதும் போது பேனா எப்போதும்
கைக்கும் வாய்க்குமாக மாறி கொண்டேயிருந்தது
நான் பேசாம பேனாவா பிறந்திருக்கலாம்

இப்படியே நான் நினைத்து கொண்டுயிருந்த
ஒரு நாள்
அவள் பக்கத்து வீட்டு ரவியை
பார்த்து கொண்டே நின்றாள்
நான் பேசாம ?????????????????????????



அனிருத் - பாகம் 2

ramya..அவள் வீட்டு..calling bell யை..அழுத்தினாள்..
அவள் அம்மா வந்து கதவை திறந்தாள்.....சிடு..சிடு..முகத்துடன்...
ஏம்மா..இப்போ....சிடு..சிடு..னு..இருக்க...
அவங்க..6 மணிக்கு தன வரதா..சொன்னீங்க...
இப்போ..மணி 5 தன.மா..ஆச்சு...
நீங்க சொன்னீங்கனு..1 மணி நேரம்..முன்னாடியே..வந்துட்டேன்..
இன்னும்..என்னம்மா..
வாடா..செல்லம்..இப்ப தான் வறியா..ஆமாப்பா..
ஏன்பா..அம்மா..இப்படி...சிடு..சிடு..னு..இருக்காங்க...
அது..ஒண்ணுமில்லேமா....பையன் வீட்டுகாரங்க..இன்னிக்கு..வரலியாம்...
பையன்...office..ல ஏதோ..urgent..வேலையா...வெளியூர்...போயிட்டானாம்...
அதனால..அடுத்த..மாசம்...வந்து..பாக்கறோம்...னு.....
பையனுடைய...அம்மா..ph ..பண்ணி சொன்னாங்க.....உங்க..அம்மா..upset...
ஓ..அப்படியா..என்று சொல்லி..kitchen குள்..சென்றாள்...

என்னம்மா..kesari..மட்டும் தான் இருக்கு..
சொஜ்ஜி..பஜ்ஜி..எல்லாம்..செய்யரேன்னு..சொன்ன..காணம்..
அவங்க வரதுக்கு..முன்னாடி சூடா...பண்ணி கொடுக்கலாம்னு..இருந்தேன்..
வரலனு ph ..வந்தவுடனே... நிறுத்திட்டேன்...
ஏன்மா..அவங்க வந்தா என்ன..வராட்டி..என்ன?
நானும் அப்பாவும்..சாப்பிடிவோம் இல்ல....
ஏன் சாப்பிட..மாட்டீங்க...வகையா..செஞ்சி வைச்சா...
சரி..சரி..அலுத்துக்காத...நீ...செய்யாட்டி...
நாங்களே...செஞ்சிகிறோம்...அவ்லோ தன.....
என்னப்பா.....
அதானே...செஞ்சிட்டா..போச்சு...ல்லா...ல்லா..........
இருவரும்..பாடிகொண்டே...kitchen குள்..சென்றார்கள்..
சற்று நேரத்தில்...இருவரும்....plateல் பஜ்ஜிகளுடன்...
என்னடி இது..எது...
இது...வாழைகா..பஜ்ஜி.... இது...உருளைகிழங்கு..பஜ்ஜி.... இது...வெங்காய..பஜ்ஜி...
இது...கத்திரிக்காய்....பஜ்ஜி.....
.....போதுமா....
அப்பளம் எங்க வைச்சி இருக்கிறனு...தெரியல....
இல்ல அதுலயும் போட்டுட்டு..இருப்போம்...
உங்கள...............ஆ...................


**************************************


hospital ல் vishal கண்முழித்தான்.. நான் எங்க இருக்கேன்..
பக்கத்தில் இருந்த nurse j.j. hospital என்றாள்..
அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது
எனக்கு என்னாச்சு... bike accident ஆகி உங்கல இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க
ஆ..ஆமா..என் கூட இருந்தவர்..ஆமா..அவர்..பேரு ராகவன் .... அவர் எப்படியிருக்கார்
சாரி சார் அவர் spot dead ... தலையில் அடிபட்டு
உங்க தலையில் helmet இல்லாம இருந்தா உங்களுக்கும் அதே கதி தான்
my god எல்லாம் என்னால ... காமு, அனி.... ஐயோ ...
sir ... sir... என்ன பண்றீங்க உங்களுக்கு கால்ல operation நடந்து இருக்கு...
உங்களால் இப்ப எழுந்து நடக்க எல்லாம் முடியாது
என்ன ?ஐயோ நான் போயே ஆகனும்
ஆமா nurse இது என்ன hospital னு சொன்னீங்க...

j.j hospital...
ஆங்.... இதே hospital தான்
nurse இங் தலையில் அடிபட்டு...காமு னு ஒரு patient admit ஆனாங்களா
ஆமா... உங்களுக்கு அவங்கல தெரியுமா..
அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு
sorry sir அவங்க இறந்துட்டாங்க
ரொம்ப critical ஆன operation skull ல பலத்த அடி
என்ன try பண்ணியும் காப்பாத்த முடியல
என்ன? அப்படினா 2 பேரும் தலையில் அடிபட்டு அதே மாதிரி
இப்போ ... அப்ப 2 பேரும் இல்ல ...
கடவுளே இது என்ன கொடுமை
ஐயோ எல்லாம் என்னால ஐயோ... அவன் தலையில் கையை வைத்து
என்ன சார் என்னாச்சு ... அவங்களுக்கு ஒரு குழந்தைக்கு இருக்கு இல்ல...
யாருக்கு?
அதான் nurse காமுக்கு ... ஆமா அனி பாவம் அழுதுகிட்டே இருந்தான்
அவன் அம்புஜம் மாமியோட இருந்தானா
ஆமா ஏன் சார் கேட்கறீங்க ... அவங்கல உங்களுக்கு...
nurse pls ... அவங்கல கொஞ்சம் கூப்பிடுறீங்கலா நான் அவங்களோட பேசனும்
அவங்க காமுவோட புருஷன் யாரோ ராகவனாம்
அவங்களுக்காக wait பண்ணிகிட்டு இருந்தாங்க..
வெளியில இருக்காங்கலானு பாக்கறேன்
கொஞ்ச நேரம் கழித்து மாமி அனியுடன் vishal roomற்கு வந்தாள்
யாருப்பா நீ என்ன பாக்கனும்னு சொன்னியாம்
vishal எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னான்
அனி ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தான்
மாமி விக்கி விக்கி அழுதாள்
ஐயோ ஒரே சமயத்தில் 2 பேரும் போய் இப்போ
இந்த குழந்தை அநாதையா நிக்கிறானே
பிறகு மாமி vishalக்கு அவர்களை பற்றி சொன்னான்
அவங்க 2 பேரும் love marriage பண்ணிகிட்டாங்க
2 பேர் வீட்லயும் ஒத்துக்கல ... அனி பொறந்ததுக்கு
அப்பறம் எல்லாம் சரியாயிடும்னு நினைச்சோம் ஆனா எதுவும் மாறல
இப்பகூட அவங்க வீட்டுக்கு ph. பண்ணிண்டு தான் வந்தேன்
சொன்னா எங்க பொண்ணு தான் எப்பவோ செத்து போயிட்டாளேனு
சொல்லி ph.லொட்டுனு வைச்சிட்டாங்க..
ராகவன் வீட்டுக்கு ph. செய்து விஷயம் சொன்ன போது
அங்கேயும் பதில் அதேவாக தான் இருந்தது
vishal முடிவு செய்து விட்டான் என்ன செய்ய வேண்டுமென்று


**************************************


ramya..ஆச்சா அவங்க வர நேரமாச்சு இன்னும் எவ்லோ நேரம் .... வரேன்மா
hall ல் vishal,vishal அம்மா,பெரியம்மா,அனி வந்து உட்கார்ந்தார்கள்
ramya..காபி கொண்டுவாம்மா
vishal பேசினான்
உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்
ramya வோட தனியாவா தம்பி ... இல்ல உங்க எல்லார்கிட்டயும் தான்
vishal எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்
எல்லாம் சரிதான் தம்பி நம்ம என்ன வேனுமென்னே வா ...
அதுக்காக நீங்களே வளர்கனும் னு ஒண்ணுமில்லையே
நம்ம வேனும்னா அனிய ஒரு அநாதை ஆசரமத்தில சேர்திட்டு
தேவையானதை எல்லாம் நம்மலே செய்யலாம்
சரியா சொன்னீங்க இதையே தான் நானும் சொன்னேன்
கேட்க மாட்டேங்கறான்(vishal அம்மா)
இல்ல சார் இது என்னோட condition உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லன்னா
வேணாம் .. நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க ...
அதுக்கு இல்ல தம்பி
நான் உங்க condition க்கு ஒத்துகறேன் ...
என்ன ரம்யா இது
pls pa அனாதை ஆசரமத்தில சேர்திட்டு அங்கிருந்து
யாரோ தத்து எடுத்திட்டு போறது
அது ஏன் நாங்களா இருக்க கூடாது...
என்னப்பா என்ன ஆசரமத்தில இருந்து தத்து எடுத்தது மறந்துட்டீங்களா
அப்பொழுது தான் ரம்யாவின் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் உறைத்தது
என்ன மன்னிச்சுடுமா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்
sorry pa நான் குத்தி காட்டனும்னு சொல்லல
எங்க வாழ்கையை அனிருத்தோட தொடங்க உங்க எல்லார்க்கும் சம்மதமா ...
சம்மதம் என்றார்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ...



Thursday, September 28, 2006

அனிருத் - பாகம் 1

ராகவன் office வேலையில் மும்முரமாக இருந்த சமயம்...cell ph. சினுங்கியது...சொல்லுடா..kamu..
நான் பக்கத்து flat.. அம்புஜம் மாமி பேசறேன்...
ஓ....சொல்லுங்க மாமி..மாமாக்கு..ஒண்ணுமில்லையே...
மாமாக்கு ஒண்ணுமில்லைபா...நம்ம காமுக்கு தான்..
காமுக்கு என்னாச்சு மாமி...
அதான் நம்ம அனிருத்தோட...birthday party வருது இல்ல...
அதுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைக்கனும்னு...இன்னிக்கு காத்தால தான் என்கிட்ட
சொல்லிண்டு இருந்தா... அனியோட அழற சத்தம் ரொம்ப நேரம் கேக்கவே..இவ அனிய கவனிக்காம...என்னத்த ...நோண்டிகிட்டு.. இருக்கானு..பாக்கலாம்னு வந்தேன்..
பாத்தா stool கவுந்து கிடக்கு..தலைக்கு பின்னாடி பலத்த அடி..
நம்ம j.j hospital ல சேத்து இருக்கேன்..
இப்போ அங்கிருந்து தான் ph. பண்ணிண்டு இருக்கேன்..
சீக்கிரம் கிளம்பி வரேலா..
இதோ உடனே கிளம்பிடறேன்..
கீழே parking placeக்கு.. வந்தவன்..
bike...a.. எங்கே வைச்சேன்...
oh..shit..பக்கத்துல....service க்கு இல்ல ..காலைல விட்டோம்..
ready ஆச்சோ இல்லையோ.. இல்ல பேசாம auto ல போயிடலாம்..
பக்கத்தில் இருக்கும் ..auto stand கிட்ட வந்த போது தான் அவனுக்கு தெரிந்தது..
ஏதோ திடிரென்று auto strike ஆம்..
அந்த area வே அல்லோலகல்ல பட்டுகிட்டு இருந்தது..
நம்ம stand காரனே கிடையாது..அவன் எப்படி..அப்படி நம்ம ஆள..
இவன் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை...
பக்கத்தில் இருக்கும் busstopக்கு சென்று ..busக்குகாக wait பண்ணி கொண்டு இருந்தான்..

****************************************


vishal bikeல் ஜாலியாக சென்று கொண்டு இருந்தான்...மனதில் ஏதோ... ஏதோ ...எண்ணங்கள்...
இன்று மாலை அவனுக்கு (இன்னிக்கு..உனக்கு பெண் பார்க்கும் படலமா ..நடத்து..நடத்து...என்று
அருண் கிண்டலடித்தது ..ஞாபகத்துக்கு வந்தது..)
ஆமா..ஆண் தானே general பொண்ணு பார்க்க பொண்ணுவீட்டுக்கு போறாங்க ...அப்போ ஆண்பார்க்கும் படலம் தன சொல்லனும்..அது என்ன பெண்பார்க்கும் படலம்...ச..
ரொம்ப முக்கியம்.... அவ எப்படி இருப்பா..
broker பொண்ணு photoவ வீட்ல கொடுதப்ப ..அம்மா பாருடானு கொடுதப்பவே..மூடிகிட்டு ..பார்த்து
இருக்கனும்..ம்...
எப்படி இருப்பா...ம்... என்று யோசித்து கொண்டிருக்கும்...சமயம்....
ராகவன் கையை மறித்து...
சார் கொஞ்ச்ம் lift வேனும்...ரொம்ப நேரமா busக்கு wait பண்ணிகிட்டு இருக்கேன்..bus..வரல..
urgenta..j.j. hospital போகனும்..
vishal எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை..
ராகவன் சொல்வதே இவன் கவனிக்கவில்லை..
சைகை மட்டும் புரிந்தது..ஒ.கே..என்று தலையை ஆட்டினான்..
என் பேரு...vishal ......உங்க பேரு.....ராகவன்...

***********************************************
vishal: நான் இன்னிக்கி பொண்ணு பார்க்க போறேன் சார்...இப்ப கூட அவ யார மாதிரி இருப்பானுதான்..யோசிச்சுகிட்டே இருந்தேன்..ம்.அவ யார மாதிரி இருந்த என்ன...
look aah sir முக்கியம்..மனசு..அவ மனசு எப்படினு எப்படி தெரிஞ்சுக்கிறது..
எப்படியா இருந்தாலும்..பார்த்த உடனே ஒரு முடிவுக்கு வர முடியாது...first அவகிட்ட பேசனும்..
பிடிச்சது,பிடிக்காதது,விருப்பு,வெருப்பு.. எல்லாத்தையும்.. தெரிஞ்சுக்கனும். என்ன sir, நான் பாட்டுக்கு பேசிகிட்டே வரேன்.. நீங்க எதுவுமே பேசமாட்டேங்கறீங்க.. sir, ரொம்ப reserved type..o..நான்
சரியான..லொடா..லொடா...type..sir..பேசனா.. பேசிகிட்டேயிருப்பேன்...அருண் சொல்றான்...அருண்
யாருனு கேக்கறீங்களா..என் best friend sir..பொதுவா...அமைதியான பையனுக்கு...லொடா..லொடா...
பொண்ணும்...லொடா..லொடா....பையனுக்கு.... அமைதியான பொண்ணும்...தான் அமைவாங்லாம்..
அதனால.. உனக்கு... அமைதியான பொண்ணு தான்னு... அருண் சொல்றான்..நீங்க என்ன sir.. சொல்றீங்க..அட,என்ன sir.. எதுவுமே.. பேசமாட்டேங்கறீங்க... ஆனாலும்..நீங்க அநியாயதுக்கு...
அமைதியா இருக்கீங்க.. அப்போ..உங்க..wife..என்ன மாதிரி..லொடா..லொடா...type...தன..

********************************************

vishal பேசி கொண்டு இருக்கும் போது ராகவன் மனதில்:
காமுவுக்கு பெரிசா ஒண்ணும் இருக்க கூடாது...கடவுளே..pls..காப்பாத்திடு...நான் இதவரைக்கும்
உன்ன கும்பிட்டதே இல்ல தான்.. கடவுள்னு ஒருத்தன் இல்லனு சொன்னவன் தான்..எனக்காக இல்லாட்டியும்... காமுவுக்குகாக...அவ உன்ன நாள் தவறாம..கும்பிட்டுகிட்டு..தானே..இருக்கா..அவளுக்காக ..இல்ல... அனிக்காக.. pls... கடவுளே.... pls.. காப்பாத்திடு....

*****************************************


vishal வார்த்தையை..கேட்டு..சுயநினைவுக்கு வந்தவன் ..என்ன sir..சொன்னீங்க...sorry..ஏதோ யோசனையில் இருந்தேன்...நீங்க சொன்னது..எதுவும்..கேட்கல...பூராவும்..கேட்கலயா..
இல்லை..
கிழிஞ்சது போ...
மறுபடியும்..replay..எல்லாம்..பண்ண முடியாது..
நீங்க எங்க போகனும்னு..சொல்லவே இல்லையே...
j.j.hospital..
j.j.hospital..க்கா...யாருக்காவது..உடம்பு...சரியில்லையா..sir...
ஆமா...kamu..என்னோட wife..தலையில்..அடிபட்டு...serious..ஆன...stage..ல..admit..பண்ணி இருக்கேனு பக்கத்து flat.. அம்புஜம் மாமிகிட்டயிருந்து...ph..வந்தது பாவம்அனி... என் குழந்தை..சாப்டானோ இல்லையோ...
ஐயோ...இது..தெரியாமா..நான் ஏதோ.. ஏதோ...ஒலரிகிட்டு...
sorry.... sir...என்று பின்னாடி திரும்பிவிட்டு...நேராக திரும்பியவன்...
எதிரே....ஒரு...school boy...cross...செய்வதை...பார்த்து..sudden break..போட...
பின்னாடி வந்து கொண்டிருந்த...lorry sudden break..போட...


தொடரும்......



Wednesday, September 27, 2006

க.மு. க.பி.

க.மு (கல்யாணத்துக்கு முன்)க.பி. (கல்யாணத்துக்கு பின்)
1I.L.U என்று எண்ணவே…எண்னவே முடியாத அளவுக்கு கூறி கொள்வார்கள்.கையை விட்டு எண்னி விடலாம்
2மணிகணக்கில் பேசுவார்கள்
நேரமே போதவில்லை
நேரமே இல்லை
3வெளியில் செல்ல ready..
எது அணிந்து செல்லலாம் என்று யோசனை… ஆலோசனை…
போகனுமா?
4பொய்.. சரளமாக வரும்.மெய்.. தான் வரும்
5பேசும் விஷயங்கள்: அவர்களுக்கே தெரியாது..பேசும் விஷயங்கள்: மாமனார்..மாமியார்
வீட்டு செலவு
குழந்தையின் school
Tele.bill, EB.bill.. due date…
உங்க side கல்யாணம்… எங்க side கல்யாணம்
6நான் மருமகனா இருக்கமாட்டேன்… மகனா இருப்பேன்..
மருமகளா இல்லை… மகளாக இருந்து.. குடும்பத்துடன் அனுசரித்து போவேன்…
எங்கம்மாவாயிருந்தா..இதுக்கு..இது..combination..
இத.. இப்படி…வைப்பாங்க..(சமையல்)
எங்க வீட்ல..அப்படி..இப்படி..
பிறந்தவீட்டு புராணம்..
7கல்யாணத்திற்கு அப்பறம்..
உன்னை அப்படி பாத்துபேன்.. இப்படி பாத்துபேன்.
அது செய்வேன்… இது செய்வேன்.
அப்படி..இப்படி.. bla..bla..
நான் சொன்னேனா……எப்போ……அப்படியா..
ஞாபகம் இல்ல..
8என் உலகமே நீ தான்..நீ இல்லை என்றால் நான்…Pls..என்னை..கொஞ்ச நேரம்.. disturb பண்ணாம இருக்கியா…
9பிறந்தநாளை சரியாக ஞாபகம் வைத்திருந்து.. அதுவும் சரியாக..12 மணி தொட்டவுடன்.. wish செய்வது, gift கொடுப்பது, இது valentines, anniversary..எல்லாத்துக்கும் பொருந்தும்..இன்னிக்கா… ஒ.. ஆமாம் இல்ல…
Sorryda. பிறகு.. wish செய்வது.... அட நாளே ஞாபகம் இல்ல.. பிறகு..gift ஆவது.. மண்ணாங்கட்டியாவது..
10நீ பேசிகிட்டே இருந்தா…கேட்டுகிட்டே..இருக்கலாம்..போலிருக்கு..யப்பா.. மழை.. அடிச்சி.. ஓஞ்ச மாதிரி இருக்கு..
11கல்யாணத்திற்கு முன் லூட்டிகல்யாணத்திற்கு பின் டுயுடி
12கல்யாணத்திற்கு… பிறகு.. நம்ம இந்த ஊருக்கு எல்லாம் போய் சுற்றி பார்கனும்..இப்பவா..no way..எனக்கு no time..
13என் செல்லம்,என் கண்ணுகுட்டி, சின்னகுட்டி, அம்முகுட்டி, பொம்முகுட்டி..
ஒரே கொஞ்சல்….sss…
எல்லாம் சொன்னா தானா..
எல்லாம் உள்ள இருக்கு.. வெளியில வரல..அவ்லோதான்..
Dialogue..s..
14கனவு உலகம்... அது ஒரு கனாக்காலம்...
15IndependenceInterdependence



பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது…….. வாருங்கள் பட்டியலை நீட்டுவோம்…

ஏன்? எதனால் இப்படி?

இதை பற்றிய விவாதம் வரும் நாட்களில் உங்களுடன்…. சிதறும்…



Saturday, September 23, 2006

பிடிக்கவில்லை...

நீ தற்கொலை செய்து கொண்டாய்
என அறிந்து பதற்றதுடன் அங்கு வந்தேன்
அங்கே நம் நண்பர்கள் அழுது கொண்டு இருந்தார்கள்
பிரம்மை பிடித்தது போல் நான் உன்னையே
பார்த்து கொண்டிருந்தேன்...என்ன ஆயிற்று
இவனுக்கு....என்னால் நம்ப முடியவில்லை..
தடுமாறி நான் அருகில் இருந்த நாற்காலியில் விழுந்தேன்
அங்கே...reading deskல் உன் எழுத்துகளை
பார்த்த எனக்கு அதிர்ச்சி.. நீ என்னை காதலித்தாயா?

அந்த roomயை விட்டு வெளியில் வந்தபோது..
நண்பர்கள் அதை பற்றி தான் பேசி கொண்டிருந்தார்கள்
.....உன்னை அவன் காதலித்தான்..நாங்க அவன்கிட்ட..
எத்தனையோ தடவை சொல்லிடுடா..தள்ளி போடாதனு..
சொல்லி இருக்கோம்...ஆனா அவன்...
இல்லடா தைரியம் வரமாட்டேங்குது..
நான் சொல்லி அவள் மறுத்துவிட்டால்..என்னால்
தாங்கிக்க முடியாது..அதவிட நான் மனசுக்குள்ளயே
வைச்சி காலமெல்லாம் காதலிச்சுகிட்டே
இருந்திடுவேன்னு சொல்லிகிட்டேயிருப்பான்..

இந்த நேரத்துல அவனுக்கு மேலபடிக்க சீட்டு கிடைக்க
அவன் U.S...போயிட்டான்..
திரும்பி வந்து நான் தான் சொல்லுவேன்
என்று promise வாங்கிகிட்டான்..
இதுக்குள்ள sudden ஆக
உனக்கு marriage fix..ஆயிட்டது...
உன் கல்யாணத்துக்காக திரும்பி வந்தவன்..
இப்போ...இப்படி பண்ணிப்பானு
கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...
sorryda..நாங்கலாவது உன்கிட்ட இதபத்தி முன்னாடியே..
அவன் பேச்ச கேக்காம...சொல்லி இருக்கனும்..

இப்போ பார்..
ஐயோ...என்று மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டார்கள்..
நான் அவர்களையே பார்த்து நின்று கொண்டிருந்தேன்..
உன்னால எப்படி இப்படி அழாம
இருக்க முடியுது என்று கேட்டார்கள்..
அவன் எடுத்த... இந்த பைத்தியகார முடிவுக்கு
நான் எதுக்கு அழனும் அவன் எந்த அளவுக்கு
உன்னை நேசிச்சானு தெரிந்தா நீ இப்படி பேசமாட்ட...
எனக்கு தெரிய தேவையில்லை...
அவன் நம்ப friendda... அதுவும் உனக்கு எவ்லோ close...
என்ன ஆச்சு உனக்கு....
i'm fine...he was my friend..but not now.

நீ...என்ன சொல்ற...
எனக்கு அவன் நண்பன் இல்லனு சொல்றேன்...
நீ கல்யாணத்துக்கு பிறகு சுத்தமா மாறிபோயிருக்கு..
இல்ல நான் மாறல அப்படியே தான் இருக்கேன்..
பின்னே ....ஏன் இப்படி..
எப்படி... அழாம இப்படி..
அதான் முன்னாடியே...அவன் சரியான..looseனு..சொல்லிட்டேனே...
ஆமா... அவன் loose... தான்...
உன்னை போய் love... பண்ணான் பார் அவன்... loose... தான்..
சே....ஏன்டா..ஏன்..இப்படி...
புருஷன்..வந்திட்டா..இப்படியாமாறி போயிடுவாங்க..

நீ..என் புருஷன் பத்தி..பேச வேண்டாம்..
ஆமா..பெரிய புருஷன்...
பெரிய புருஷன்..தான்..
உனக்கு..தெரியுமா அவன் கல்யாணத்துக்கு முன்னாடி
2 வருஷம் ஒரு பொண்ண..sincere'a..love..பண்ணானு..
அவங்க..வீட்ல ஒத்துக்கல..
அடப்பாவி..ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டானா..
shut up..

கல்யாணத்துக்கு..முன்னாடியே..அவன் என்கிட்ட...
எல்லாத்தையும்..சொல்லிட்டான்...
தெரிஞ்சுமா..கல்யாணம் பண்ணிகிட்ட..
தெரிஞ்சதனால தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்...
என்ன?

என் புருஷன..எத்தனை..நாளா..தெரியும்னு..உனக்கே தெரியும்..
ஆனா செத்து கிடக்கிறானே இந்த நாய்..
எத்தனை வருஷ பழக்கம் சொல்லு..
அவனுக்கு சொல்லனும்னு..எந்த..அவசியமும்..இல்ல..
காலமெல்லாம் சொல்லாம...
என்னை..ஏமாத்தி கூட..இருக்கலாம்..
ஆனா..அவன்..எதையும்..எதையும்..மறைக்கல...

ஆனா என்கூடவே பழகின இந்த நாய்..
எப்படி..எப்படி..மறைக்கலாம் சொல்லு..
எதைஎதையோ..மறைக்காம சொன்னவன்...
இதை..ஏன் மறைக்கனும்...
இதெல்லாம்..கூடவா உன்கிட்ட சொல்லியிருக்கானு..
நீ கூட சொல்லுவ..ஞாபகம் இருக்கா
அப்படிபட்டவன் இதை ஏன் மறைக்கனும்..

அதான் சொன்னோமே..
நீ..மறுத்துடுவியோ..என்கிற பயத்துல தான்....
அப்போ... சொல்லியிருந்தா..ஏத்துக்கிட்டு..இருப்பியா..
அது எனக்கு தெரியாது...
ஆனா..எனக்கு இப்போ இவன பிடிக்கல...
to hell with him and to hell with u people..
எனக்கு இப்படி ஒரு நண்பனே..இல்ல..
எனக்கு..அவன..பிடிக்கல.. பிடிக்கல...பிடிக்கல...
என்று கத்தி கொண்டே..அந்த இடத்தை கடந்தேன்..

நேராக என் வீட்டிற்கு
சென்று கதவை சாத்தி கொண்டு கட்டிலில் சாய்ந்தேன்..
பிடிக்கல ...உன்ன... பிடிக்கல....
ஏன்டா..ஏன்..ஏன்..இப்படி...

schoolல்..ஒரு markல்...
school first 'ஐ miss..பண்ணினப்ப...
நீ..கலங்குவியோ..என்று நான் உன்னை..பார்த்தேன்...
ஆனால் நீ..தைரியமாக தான் இருந்தாய்..

கல்லூரியில்..campus interviewவில்..
just like that miss ஆனப்ப..
நீ..கலங்குவியோ..என்று நான் உன்னை..பார்த்தேன்.
it's all in the game..என்றாய்..

உன் முதல் jobல் நீ select ஆகி...
ஏதோ காரணத்தால் நீ reject ஆகி போனபோது..
நீ..கலங்கிபோவாயோ..என்று உன்னை பார்க்க..
நீ என்னை..சமாதானபடுத்தி..
மேல படிக்கனும் இருக்கு அதான்..சொன்னியேடா...

ஏன்..உன் அப்பாவும் அம்மாவும்..car crashல்...
இறந்த போனபோது கூட..
விக்கி விக்கி.... அழுதது..நான் தான்..
அப்பொழுது கூட.. வருவதும்..போவதும்...
நம்ம..கைல..இல்ல... என்று சொல்லி
தைரியமாக..தானேடா..இருந்தாய்..
எப்பொழுதும்..தைரியமாக..இருந்து..
என்னை..ஆறுதல்படுத்தும் நீ..

எனக்கே தெரியாமல்..எப்போதுடா..கோழை..ஆனாய்..
பிடிக்கவில்லை..

நீ கோழை..ஆனதற்கு..காரணமாகி போன..
இந்த..காதலை..எனக்கு பிடிக்கவில்லை..

நான் அழும் போது எல்லாம் தோள் கொடுத்த என் நண்பனே..
உன்னை..காதலிக்க..வைத்தது..நானா...
ஐயோ..என்னால்...கட்டுபடுத்த முடியவில்லையே..
விக்கி..விக்கி..அழுகிறேன்..சாய்த்து கொள்ள..
நீ இல்லாமல் உன்னை..மரணபடுக்கையில் தள்ளியது..நானா..

பிடிக்கவில்லை...
என்னை... எனக்கு பிடிக்கவில்லை..
என்னை... எனக்கு பிடிக்கவில்லை..



பார்வை

அவள் கடைக்கு ஏதோ
வாங்க வந்து இருந்தாள்
எதுனுடனோ shaving cream free...
என்று கடைகாரன் கொடுத்தான்
அங்கே இருந்த நான்
நக்கலாக... ஒரு பார்வை பார்த்தேன்

அவளுக்கு கை fracture ஆகி
கையில் மாவுகட்டு போட்டு இருந்த
மற்றொரு சமயம் அதே போல்
கடைக்கு வந்தாள்...
எதற்கோ free என்று கடைகாரன் pen.. கொடுத்தான்
மறுபடியும் நான் அதே நக்கல் பார்வையுடன்...

வேண்டுதலுக்கு போல...
அவள் மொட்டை அடித்திருந்தாள்
அதே கடை..அதே போல்..இந்த சமயம்
எதற்கோ free என்று கடைகாரன் comb.. கொடுத்தான்
மறுபடியும் நான் அதே நக்கல் பார்வையுடன்...

மற்றொரு சமயம்....நான் bikeல்
அவள் எதிரில் நடந்து வந்து கொண்டு இருந்தாள்
ஏதோ பெரிய hero என்கின்ற நினைப்பில்
நான் acceleratorயை... முறுக்கி முறுக்கி
வண்டியை சுத்தி கொண்டு இருந்தேன்
திடிரென்று bike slip ஆகி
காலில் பலத்த அடிபட்டு கீழே விழுந்தேன்...

என் மனதில்...இப்போது அவள்...
அவள் பார்வை...
ஐயோ..தவிப்புடன் திரும்பி பார்த்தேன்...
அங்கே அவள் இல்லை..

திடிரென்று 2 பேர்..என்னை தூக்கி...
அருகிலேயே இருந்த hospitalகுள்
கொண்டு சென்றார்கள்
யார் சொல்லி வந்தீர்கள் என்று
நான் அவர்களை கேட்க
அவர்கள் சுட்டி காட்டிய இடத்தில் நீ...

உன் பார்வை
அதில் நக்கல்,ஏளனம்,பரிதாபம்,அன்பு...
இல்லை...
அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன?என்று
எண்ணி எண்ணி பார்க்கிறேன்....
தெரியவில்லை.....



ஏன் மறந்தாய்....

அப்பப்பா,தலைக்குமேல் வேலை இருக்கு
முதலில்,ஜவுளி
எந்த கடை போகலாம் என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்

என்ன கலர்?என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்

நகை எந்த கடை என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்

எந்த design என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்

வளையல்,கம்மல்,நெத்திசுட்டி,நெக்லெஸ்,லொட்டு,லொசுக்கு
ஏன் matching செருப்பு கூட
எது என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்

வீட்டுக்கு போனதும்
invitation card select பண்ண
கடை பையன் வந்து இருந்தான்
எந்த card பிடிச்சிருக்கு என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்

card உள்ளே print செய்ய
போகின்ற matter,color,pattern
என்ன வேண்டும் என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்

எல்லாம் சரி அதிலே மணமகன்.............
என்று எழுதி இருந்த
அந்த மணமகன்
உனக்கு பிடிச்சிருக்கா?
என்று ஏன் கேட்கவில்லை
எல்லாம்... கேட்ட நீ...
இதை ஏன் மறந்தாய்....



தெளிவு

இருவரும் என்னை நேசிக்கிறார்கள்
யாரை ஏற்று கொள்வது
என்று தெரியாமல் தவிக்கிறேன்
என்று கூறினேன்...
தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு
உன் கண்னை இறுக மூடி கொள்
யார் முகம் உனக்கு தெரிகிறதோ
அந்த முகம் தான் உன்னை உண்மையாக
நேசிக்கிறது... என்று நீ சொன்னாய்
நானும் அவ்வாறே செய்து பார்த்தேன்
எனக்கு... தெரிந்தது...
எப்போதும் எதற்காகவும் கண்டிக்காத
என் தந்தையின் முகம்...
அந்த க்ஷணத்திலேயே நான்
முடிவு செய்து விட்டேன்....



பணம்

இருவரும் அவரவர் விட்டில்
இன்று சொல்லி விடுவோம்
என்று முடிவு செய்து பிரிந்து சென்றோம்...

என் விட்டில்;
அம்மா...அவன்....பெயர்..ஊர்..வயசு..நம்ம ஜாதி தான்...
அவனுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு
என்னை நல்லா பாதுக்குவான்..
தாங்குதாங்குனு தாங்குவான்
அம்மா:எல்லாம் சரி...அந்த பையன்...எவ்வளவு சம்பாதிக்கிறான்...

உன் விட்டில்;
அம்மா...அவள்...பெயர்..ஊர்..வயசு..நம்ம ஜாதி தான்...
ரொம்ப அமைதியான,
நம்ம குடும்பத்துக்கு ஏத்த
அடக்க ஒடுக்கமான பொண்ணு
அம்மா:எல்லாம் சரி...அந்த பொண்ணு வீட்ல எவ்வளவு வரதட்சினை கொடுப்பாங்க...



மெளனம்...

மனசு சரியில்லை
உன் கூட... கொஞ்சம் பேசனும்...
என்று நான் சொன்னேன்
எனக்கும் தான்... வெளியில் சென்று பேசலாம்...
என்று நீ சொன்னாய்
சேர்ந்து சென்று ஒரு பாறையில்
அருகருகே அமர்ந்து
மெளனமாக இருந்தோம்...
அங்கிருந்து எழுந்து சென்ற பின்
மனசு... இலேசாகி இருந்தது
பிறகு... நீ சொல்ல நான்
தெரிந்து கொண்டேன்
உனக்கும் தான் என்று....



என்னவனே...

நெடுந்தூர பயணத்துக்கு...
நான் போய் தான் ஆக வேண்டும்...
சீக்கிரம் திரும்பி விடுவேன் என்று கூறி...
நீ கிளம்பி போய் விட்டாய்...

நாட்கள் கழிந்தன...
நான் உன்னை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்...
நீ வரவில்லை... பிறகு
தொலை பேசியில்... தொடர்பு கொண்டு
இன்னும் கொஞ்ச நாட்கள்...
இங்கேயே இருக்கும்படி ஆகிவிட்டது...
வந்து விடுவேன் என்றாய்

எப்பொழுது என்று கேட்டேன்
விரைவில்... என்று கூறினாய்
இல்லை... வந்து விடு...
திரும்பும் தேதி சொல் என்று
திரும்ப...திரும்ப...கத்தினேன்...

உனக்கு கோபம் வந்து...
தெரியாது... தெரிந்தால் கூறமாட்டேனா...
இப்பொழுது என்ன வந்துவிட்டது
அங்கே இருந்தால் மட்டும் என்ன

இப்போது கூட பார்...
எப்போதும் நீ திட்டி,கத்தி கொண்டு தானே இருக்கிறாய்...
எங்கே இருந்தால் என்ன? என்ன வித்தியாசம்?
என்று நொடிபொழுதில் சொல்லி
நீ தொலைபேசியை துண்டித்து விட்டாய்...

ஆம்... நிஜம் தான்... ஆனால்...
எனக்கு தான் என்ன வித்தியாசம்
என்று சொல்ல தெரியவில்லை
ஆனால் ஒன்று மட்டும் எனக்கு
தெள்ள தெளிவாக தெரிகிறது
எனக்கு நீ வேண்டும்..

என் கூட சிரித்து பேச அல்ல,
அடித்து விளையாட அல்ல,
சண்டை போட அல்ல,
சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட அல்ல,
பகிர்ந்து கொள்ள அல்ல,
தோள் கொடுக்க அல்ல,
அரவணைக்க அல்ல

பின்னே எதற்காக என்று நானே
என்னை கேட்டு கொள்கிறேன்
தெரியவில்லை...
எதற்காக என்று எனக்கு தெரியவில்லை...

எனக்கு கைகள் நடுங்கி கொண்டு,
கால்கள் தளர்ந்து கொண்டு,
நெஞ்சு கனத்து கொண்டு,
தொண்டை அடைத்து கொண்டு,
கண்கள் இருட்டி கொண்டு,
வாயில் வார்த்தை சிக்கி கொண்டு

இல்லை... எனக்கு சொல்ல தெரியவில்லை...
கண்களில் இருந்து கண்ணீர் தான்...
அருவி மாதிரி கொட்டுகிறது...
இல்லை... தெரியவில்லை...
என்ன வித்தியாசம்...
எதற்காக... என்று சொல்ல
எனக்கு...தெரியவில்லை..
என்னவனே, நான் என் செய்வேன்???

...சிதறும் :-(



எண்ண... என்ன?

நான் என்ன எழுத வேண்டும்
என்று என்னிடம் கேட்டேன்
எண்ண எழுத வேண்டும்
என்று பதில் வந்தது
எண்ண என்ன எழுத வேண்டும்
என்று என்னிடம் கேட்டேன்
ஏனைய எண்ணு
என்று பதில் வந்தது

..............................


என்ன? எதுவுமே தெரியவில்லையா?
அட, அதெப்படி உங்களுக்கு தெரியும்
நான் தான் எண்ணி கொண்டு இருக்கிறேனே!!!
என்ன நீங்களும் எண்ணுகிறீர்களா?
எண்ணுங்கள், என்ன என்று
எண்ணாமல் எண்ண ஆரம்பியுங்கள்
எண்ணங்கள் தொடரட்டும்...
இல்லை.. இல்லை..
சிதற..... ஆரம்பிக்கட்டும்.....
அது எதுவாக இருந்தால் என்ன???

...................................................................... சிதறும் :-)