...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Saturday, September 23, 2006

எண்ண... என்ன?

நான் என்ன எழுத வேண்டும்
என்று என்னிடம் கேட்டேன்
எண்ண எழுத வேண்டும்
என்று பதில் வந்தது
எண்ண என்ன எழுத வேண்டும்
என்று என்னிடம் கேட்டேன்
ஏனைய எண்ணு
என்று பதில் வந்தது

..............................


என்ன? எதுவுமே தெரியவில்லையா?
அட, அதெப்படி உங்களுக்கு தெரியும்
நான் தான் எண்ணி கொண்டு இருக்கிறேனே!!!
என்ன நீங்களும் எண்ணுகிறீர்களா?
எண்ணுங்கள், என்ன என்று
எண்ணாமல் எண்ண ஆரம்பியுங்கள்
எண்ணங்கள் தொடரட்டும்...
இல்லை.. இல்லை..
சிதற..... ஆரம்பிக்கட்டும்.....
அது எதுவாக இருந்தால் என்ன???

...................................................................... சிதறும் :-)



2 Comments:

Anonymous Anonymous said...

ரொம்ப நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய கவிதை, கதை எழுத வாழ்த்துக்கள்!

September 24, 2006 2:44 AM  
Anonymous Anonymous said...

எண்ணச் சிதறல்கள்…

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் — குறள்

பொருள்-எண்ணியவர் எண்ணியவாறு செயல் ஆற்றுவதில் உறுதி
உடையவராக இருக்கப் பெற்றால் அவர் எண்ணியவற்றை
எண்ணியவாறு அடைவர்.

என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப இக்கவிதை அமைந்துள்ளது.
இவர் தன்னுடைய எண்ணச் சிதறல்களை எவ்வளவு அழகாக
வெளிபடுத்தி இருக்கிறார் பாருங்கள்.

எண்ணத்தையும்-என்னத்தையும் வைத்து என்னமாய்
வார்த்தை விளையாட்டு விளையாடியிருக்கிறார்.
தமிழில் மட்டும் தான் இவ்வாறு சிறப்பாக எழுத முடியும்.

எண்ணங்கள் எழுத்துகளாகும்போது
எழுத்துகள் வலிமையடைகின்றன
எண்ணங்கள் எண்ணங்களாகவே இருக்கும்போது
எழுத்துகள் ஏமாளியாகின்றன.

தொடரட்டும் இவரது கவிதைப்பணி!

நட்புடன்
த.பிரகாஷ்

September 24, 2006 2:48 AM  

Post a Comment

<< Home