...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Sunday, January 07, 2007

துளி

சிப்பிக்குள் முத்தாவதற்கு
ஒரு துளி போதுமாம்
அட உன் ஒரு
துளி பார்வை கிடைத்ததால்
நான் இன்று புதிப்பிக்கபட்டு
புதியவனாய் மாறி
புனிதனானேன்ஏன் எதற்கு எப்படி

என் மனதில்
ஏன் நீ எனக்காக பிறந்த
எதற்கு எனக்கே எனக்காக
எப்படி எனக்கு மட்டுமே
சொந்தமான என்று
கண் இமைக்கும் நேரத்தில் தோன்றியதோவாக்களிப்பு

தேர்தல் , எங்கு பார்த்தாலும்
சிந்திப்பீர் வாக்களிப்பீர்!
நான் சிந்திக்காமலேயே
வாக்களித்துவிட்டேன் ! உனக்கு !சிரிப்பு

நான் துவைக்கும் போது
வருகிற சோப்பு நுரைகள்
உன் வெள்ளை சிரிப்புகளை
அல்லவா ஞாபகபடுத்துகிறதுநன்றி

மூன்று எழுத்தை
சொல்லிவிட்டு போ என்றேன்
காதல் சொல்வாய் என்று எண்ணி
ஆனால் நீயோ நன்றி என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்ஹோலி

வண்ண வண்ண ரங்கோலியை
போட்டு முடித்து விட்டாய்
எப்பொழுது நம் வாழ்கையை
ஹோலி ஆக்க போகிறாய்முடி

கொண்டையாய் இருந்து கழண்டு
விழுகிற உன் முடி
செடியிலிருந்து விழும் பூவை
போல் அல்லவா இருக்கிறதுஆச்சர்யம்

என்னை அப்படியே வரைந்து
காட்டமுடியுமா என்று நீ கேட்டாய்
நான் வரைந்ததை நீ ஆச்சர்யபட்டு
பார்த்து கொண்டிருந்தபோது
நானும் ஆச்சர்யபட்டு கொண்டிருந்தேன்
உன்னை பார்த்துமௌனம்

நீ என் மீது கோபபட்டு
கத்தி ஏன் அடித்தால் கூட
எனக்கு வலிக்கவில்லை
உன் மௌனம் தான் என்னை கொல்கிறதுநினைவலைகள்

அலைகளை பார்த்தபடி
நான் அமர்கிற போது
என்னையும் அறியாமல் வந்து
என்னுடன் ஒட்டி கொள்கிறது
உன்னுடைய நினைவலைகள்Wednesday, October 11, 2006

நீ

என்னுள் புகுந்து
என்னில் கலந்து
ஒன்றோடு ஒன்றாக இணைந்து
உயிரோடு உயிராக பிணைந்து
என் உடல், பொருள், ஆவி
எல்லாம் நீயாக வியாபித்து
அகலகில்லேன் என்று விஸ்வரூபம் எடுத்து
யாதுமாகி நிற்கின்றாய்...Friday, October 06, 2006

கண்டுகொண்டேன்!

எங்கோ, எப்படியோ, யாருக்காகவோ
யாராவது பிறந்து இருப்பார்களாம்
கேள்விபட்டு இருக்கிறேன்... அவ்வளவே
உனை பார்த்தவுடன்
அது நீ என்று கண்டுகொண்டேன்!Thursday, October 05, 2006

வித்தியாசம்

பொதுவாக, பேருந்தில் பெண்களுக்காக
ஒதுக்கபட்ட இடத்தில்
ஆண்கள் உட்கார்ந்து இருந்தால்
பெண்கள் அவர்களை எழுப்பி விடுகிறார்கள்
அதுவே, ஆண்களுக்கான இடத்தில்
பெண்கள் உட்கார்ந்து இருந்தால்
அவர்களை ஆண்கள் எழுப்பி நான் பார்த்ததில்லை
ஏன் இந்த வித்தியாசம்?

இத்தனைக்கும் பெண்கள் இடத்தில்
பெண்ணுடன் உட்கார்ந்து இருப்பவர் பொதுவாக
காதலனாக (அ) கணவனாக தான் இருப்பான்
அப்படியிருக்க, அவர்களை எழுப்ப கூடாது
என்ற எண்ணம் ஆண்களுக்கு இருப்பது போல்
ஏன் பெண்களுக்கு இருப்பதில்லை?என்னுள்

அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள்
நீ இறந்து விட்டாயாம்
ஆனால் எனக்கு மட்டும் அழுகையே வரவில்லை
நீ தான் என்னுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறாயேSunday, October 01, 2006

நீ?

என் காலை நீ
என் மாலை நீ

என் பகலும் நீ
என் இரவும் நீ

என் நிழல் நீ
என் நிஜம் நீ

என் நினைவு நீ
என் கனவு நீ

என் வாய்மை நீ
என் பொய்மை நீ

என் சிரிப்பு நீ
என் அழுகை நீ

என் துணிவும் நீ
என் பயமும் நீ

என் இன்பம் நீ
என் துன்பம் நீ

என் சாந்தம் நீ
என் கோபம் நீ

என் பலம் நீ
என் பலவீனம் நீ

யாருடன் நீ ?Saturday, September 30, 2006

இதய ஒளி

எப்போதும் போல் நான் என் அறையில்
உட்கார்ந்து கிறுக்கி கொண்டிருந்தேன்
house owner பையன் அருண், மாமா என்று
கூவி கொண்டே மேலே வந்தான்

நான் கிறுக்கி கொண்டிருந்த diaryயை பார்த்து
இது என்ன மாமா என்று
heart symbol யை பார்த்து கேட்டான்
என்னுடைய இதயம் என்றேன்
அப்ப நீங்களும் என்னை மாதிரி தானா என்றான்

என்னடா உளர்ரே
doctor தான் மாமா சொல்லிகிட்டு இருந்தாரு
என் இதயத்தில ஒட்டை இருக்காம்
இன்னிக்கி paperல கூட என் photo
வந்துச்சே நீங்க பாக்கலயா...

அன்றைய நாளிதழையை
பிரித்து பார்த்தேன்...
யாரோ என்னை ஓங்கி
அறைவது போல் இருந்தது

அடிபாவி...
உன்னுடன் shopping சென்று
அதற்காக செலவழித்தது
எவ்வளவு... எவ்வளவு

உன்னுடன் restaurant களுக்கு சென்று
அதற்காக செலவழித்தது
எவ்வளவு... எவ்வளவு

உனக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டுமென்று
நான் வாங்கியது
எவ்வளவு... எவ்வளவு

உன்னை கொண்டு ஊர் சுற்ற வேண்டுமென்று
என் இரண்டுசக்கர வண்டிக்குள் நான் போட்டது
எவ்வளவு... எவ்வளவு

இவ்வளவும் செய்த
எனக்கு நீ
டாடா காட்டிவிட்டு போய்விட்டாய்

பிறகு...
உன்னை மறக்க வேண்டுமென்று
நான் சிகரெட், மது, அது, இது
எவ்வளவு... எவ்வளவு

உனக்காக நான் செய்த செலவுகளை
கூட்டி கழித்து பார்த்தால்
இதோ எதுவும் தெரியாமல் நிற்கிறானே
அருண் இவனை போல எத்தனையோ
அருணின் வாழ்கையில்
ஒளி ஏற்று இருக்கலாம்

இது தெரியாமல் நான்
நீ என்னை விட்டு போய்விட்டதால்
என் இதயம் காலியாகி விட்டது என்று
எவ்வளவு... எவ்வளவு மடதனமாக

எதுக்கு மாமா இத எல்லாம் எரிக்கிறீங்க
இனி இதுக்கு அவசியமில்லை
வேற வேலை இருக்கு
என்ன வேலை மாமா
இனி பல பேருடைய வாழ்கையில்
ஒளி ஏத்தனும்...Friday, September 29, 2006

பேசாம???

அவள் ரோஜாபூவை பார்த்து
நின்று கொண்டிருந்தாள்
நான் பேசாம ரோஜாபூவா பிறந்திருக்கலாம்

அவள் மழையை ரசித்து
கொண்டு நின்றாள்
நான் பேசாம மழையா பிறந்திருக்கலாம்

அவள் cell ph.ல்
பேசி கொண்டேயிருந்தாள்
நான் பேசாம cell ph.ஆ பிறந்திருக்கலாம்

அவள் நிறைய புத்தகங்களை
வாசித்து கொண்டேயிருந்தாள்
நான் பேசாம புத்தகமா பிறந்திருக்கலாம்

அவள் எழுதும் போது பேனா எப்போதும்
கைக்கும் வாய்க்குமாக மாறி கொண்டேயிருந்தது
நான் பேசாம பேனாவா பிறந்திருக்கலாம்

இப்படியே நான் நினைத்து கொண்டுயிருந்த
ஒரு நாள்
அவள் பக்கத்து வீட்டு ரவியை
பார்த்து கொண்டே நின்றாள்
நான் பேசாம ?????????????????????????அனிருத் - பாகம் 2

ramya..அவள் வீட்டு..calling bell யை..அழுத்தினாள்..
அவள் அம்மா வந்து கதவை திறந்தாள்.....சிடு..சிடு..முகத்துடன்...
ஏம்மா..இப்போ....சிடு..சிடு..னு..இருக்க...
அவங்க..6 மணிக்கு தன வரதா..சொன்னீங்க...
இப்போ..மணி 5 தன.மா..ஆச்சு...
நீங்க சொன்னீங்கனு..1 மணி நேரம்..முன்னாடியே..வந்துட்டேன்..
இன்னும்..என்னம்மா..
வாடா..செல்லம்..இப்ப தான் வறியா..ஆமாப்பா..
ஏன்பா..அம்மா..இப்படி...சிடு..சிடு..னு..இருக்காங்க...
அது..ஒண்ணுமில்லேமா....பையன் வீட்டுகாரங்க..இன்னிக்கு..வரலியாம்...
பையன்...office..ல ஏதோ..urgent..வேலையா...வெளியூர்...போயிட்டானாம்...
அதனால..அடுத்த..மாசம்...வந்து..பாக்கறோம்...னு.....
பையனுடைய...அம்மா..ph ..பண்ணி சொன்னாங்க.....உங்க..அம்மா..upset...
ஓ..அப்படியா..என்று சொல்லி..kitchen குள்..சென்றாள்...

என்னம்மா..kesari..மட்டும் தான் இருக்கு..
சொஜ்ஜி..பஜ்ஜி..எல்லாம்..செய்யரேன்னு..சொன்ன..காணம்..
அவங்க வரதுக்கு..முன்னாடி சூடா...பண்ணி கொடுக்கலாம்னு..இருந்தேன்..
வரலனு ph ..வந்தவுடனே... நிறுத்திட்டேன்...
ஏன்மா..அவங்க வந்தா என்ன..வராட்டி..என்ன?
நானும் அப்பாவும்..சாப்பிடிவோம் இல்ல....
ஏன் சாப்பிட..மாட்டீங்க...வகையா..செஞ்சி வைச்சா...
சரி..சரி..அலுத்துக்காத...நீ...செய்யாட்டி...
நாங்களே...செஞ்சிகிறோம்...அவ்லோ தன.....
என்னப்பா.....
அதானே...செஞ்சிட்டா..போச்சு...ல்லா...ல்லா..........
இருவரும்..பாடிகொண்டே...kitchen குள்..சென்றார்கள்..
சற்று நேரத்தில்...இருவரும்....plateல் பஜ்ஜிகளுடன்...
என்னடி இது..எது...
இது...வாழைகா..பஜ்ஜி.... இது...உருளைகிழங்கு..பஜ்ஜி.... இது...வெங்காய..பஜ்ஜி...
இது...கத்திரிக்காய்....பஜ்ஜி.....
.....போதுமா....
அப்பளம் எங்க வைச்சி இருக்கிறனு...தெரியல....
இல்ல அதுலயும் போட்டுட்டு..இருப்போம்...
உங்கள...............ஆ...................


**************************************


hospital ல் vishal கண்முழித்தான்.. நான் எங்க இருக்கேன்..
பக்கத்தில் இருந்த nurse j.j. hospital என்றாள்..
அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது
எனக்கு என்னாச்சு... bike accident ஆகி உங்கல இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க
ஆ..ஆமா..என் கூட இருந்தவர்..ஆமா..அவர்..பேரு ராகவன் .... அவர் எப்படியிருக்கார்
சாரி சார் அவர் spot dead ... தலையில் அடிபட்டு
உங்க தலையில் helmet இல்லாம இருந்தா உங்களுக்கும் அதே கதி தான்
my god எல்லாம் என்னால ... காமு, அனி.... ஐயோ ...
sir ... sir... என்ன பண்றீங்க உங்களுக்கு கால்ல operation நடந்து இருக்கு...
உங்களால் இப்ப எழுந்து நடக்க எல்லாம் முடியாது
என்ன ?ஐயோ நான் போயே ஆகனும்
ஆமா nurse இது என்ன hospital னு சொன்னீங்க...

j.j hospital...
ஆங்.... இதே hospital தான்
nurse இங் தலையில் அடிபட்டு...காமு னு ஒரு patient admit ஆனாங்களா
ஆமா... உங்களுக்கு அவங்கல தெரியுமா..
அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு
sorry sir அவங்க இறந்துட்டாங்க
ரொம்ப critical ஆன operation skull ல பலத்த அடி
என்ன try பண்ணியும் காப்பாத்த முடியல
என்ன? அப்படினா 2 பேரும் தலையில் அடிபட்டு அதே மாதிரி
இப்போ ... அப்ப 2 பேரும் இல்ல ...
கடவுளே இது என்ன கொடுமை
ஐயோ எல்லாம் என்னால ஐயோ... அவன் தலையில் கையை வைத்து
என்ன சார் என்னாச்சு ... அவங்களுக்கு ஒரு குழந்தைக்கு இருக்கு இல்ல...
யாருக்கு?
அதான் nurse காமுக்கு ... ஆமா அனி பாவம் அழுதுகிட்டே இருந்தான்
அவன் அம்புஜம் மாமியோட இருந்தானா
ஆமா ஏன் சார் கேட்கறீங்க ... அவங்கல உங்களுக்கு...
nurse pls ... அவங்கல கொஞ்சம் கூப்பிடுறீங்கலா நான் அவங்களோட பேசனும்
அவங்க காமுவோட புருஷன் யாரோ ராகவனாம்
அவங்களுக்காக wait பண்ணிகிட்டு இருந்தாங்க..
வெளியில இருக்காங்கலானு பாக்கறேன்
கொஞ்ச நேரம் கழித்து மாமி அனியுடன் vishal roomற்கு வந்தாள்
யாருப்பா நீ என்ன பாக்கனும்னு சொன்னியாம்
vishal எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னான்
அனி ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தான்
மாமி விக்கி விக்கி அழுதாள்
ஐயோ ஒரே சமயத்தில் 2 பேரும் போய் இப்போ
இந்த குழந்தை அநாதையா நிக்கிறானே
பிறகு மாமி vishalக்கு அவர்களை பற்றி சொன்னான்
அவங்க 2 பேரும் love marriage பண்ணிகிட்டாங்க
2 பேர் வீட்லயும் ஒத்துக்கல ... அனி பொறந்ததுக்கு
அப்பறம் எல்லாம் சரியாயிடும்னு நினைச்சோம் ஆனா எதுவும் மாறல
இப்பகூட அவங்க வீட்டுக்கு ph. பண்ணிண்டு தான் வந்தேன்
சொன்னா எங்க பொண்ணு தான் எப்பவோ செத்து போயிட்டாளேனு
சொல்லி ph.லொட்டுனு வைச்சிட்டாங்க..
ராகவன் வீட்டுக்கு ph. செய்து விஷயம் சொன்ன போது
அங்கேயும் பதில் அதேவாக தான் இருந்தது
vishal முடிவு செய்து விட்டான் என்ன செய்ய வேண்டுமென்று


**************************************


ramya..ஆச்சா அவங்க வர நேரமாச்சு இன்னும் எவ்லோ நேரம் .... வரேன்மா
hall ல் vishal,vishal அம்மா,பெரியம்மா,அனி வந்து உட்கார்ந்தார்கள்
ramya..காபி கொண்டுவாம்மா
vishal பேசினான்
உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்
ramya வோட தனியாவா தம்பி ... இல்ல உங்க எல்லார்கிட்டயும் தான்
vishal எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்
எல்லாம் சரிதான் தம்பி நம்ம என்ன வேனுமென்னே வா ...
அதுக்காக நீங்களே வளர்கனும் னு ஒண்ணுமில்லையே
நம்ம வேனும்னா அனிய ஒரு அநாதை ஆசரமத்தில சேர்திட்டு
தேவையானதை எல்லாம் நம்மலே செய்யலாம்
சரியா சொன்னீங்க இதையே தான் நானும் சொன்னேன்
கேட்க மாட்டேங்கறான்(vishal அம்மா)
இல்ல சார் இது என்னோட condition உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லன்னா
வேணாம் .. நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க ...
அதுக்கு இல்ல தம்பி
நான் உங்க condition க்கு ஒத்துகறேன் ...
என்ன ரம்யா இது
pls pa அனாதை ஆசரமத்தில சேர்திட்டு அங்கிருந்து
யாரோ தத்து எடுத்திட்டு போறது
அது ஏன் நாங்களா இருக்க கூடாது...
என்னப்பா என்ன ஆசரமத்தில இருந்து தத்து எடுத்தது மறந்துட்டீங்களா
அப்பொழுது தான் ரம்யாவின் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் உறைத்தது
என்ன மன்னிச்சுடுமா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்
sorry pa நான் குத்தி காட்டனும்னு சொல்லல
எங்க வாழ்கையை அனிருத்தோட தொடங்க உங்க எல்லார்க்கும் சம்மதமா ...
சம்மதம் என்றார்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ...