...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Saturday, September 30, 2006

இதய ஒளி

எப்போதும் போல் நான் என் அறையில்
உட்கார்ந்து கிறுக்கி கொண்டிருந்தேன்
house owner பையன் அருண், மாமா என்று
கூவி கொண்டே மேலே வந்தான்

நான் கிறுக்கி கொண்டிருந்த diaryயை பார்த்து
இது என்ன மாமா என்று
heart symbol யை பார்த்து கேட்டான்
என்னுடைய இதயம் என்றேன்
அப்ப நீங்களும் என்னை மாதிரி தானா என்றான்

என்னடா உளர்ரே
doctor தான் மாமா சொல்லிகிட்டு இருந்தாரு
என் இதயத்தில ஒட்டை இருக்காம்
இன்னிக்கி paperல கூட என் photo
வந்துச்சே நீங்க பாக்கலயா...

அன்றைய நாளிதழையை
பிரித்து பார்த்தேன்...
யாரோ என்னை ஓங்கி
அறைவது போல் இருந்தது

அடிபாவி...
உன்னுடன் shopping சென்று
அதற்காக செலவழித்தது
எவ்வளவு... எவ்வளவு

உன்னுடன் restaurant களுக்கு சென்று
அதற்காக செலவழித்தது
எவ்வளவு... எவ்வளவு

உனக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டுமென்று
நான் வாங்கியது
எவ்வளவு... எவ்வளவு

உன்னை கொண்டு ஊர் சுற்ற வேண்டுமென்று
என் இரண்டுசக்கர வண்டிக்குள் நான் போட்டது
எவ்வளவு... எவ்வளவு

இவ்வளவும் செய்த
எனக்கு நீ
டாடா காட்டிவிட்டு போய்விட்டாய்

பிறகு...
உன்னை மறக்க வேண்டுமென்று
நான் சிகரெட், மது, அது, இது
எவ்வளவு... எவ்வளவு

உனக்காக நான் செய்த செலவுகளை
கூட்டி கழித்து பார்த்தால்
இதோ எதுவும் தெரியாமல் நிற்கிறானே
அருண் இவனை போல எத்தனையோ
அருணின் வாழ்கையில்
ஒளி ஏற்று இருக்கலாம்

இது தெரியாமல் நான்
நீ என்னை விட்டு போய்விட்டதால்
என் இதயம் காலியாகி விட்டது என்று
எவ்வளவு... எவ்வளவு மடதனமாக

எதுக்கு மாமா இத எல்லாம் எரிக்கிறீங்க
இனி இதுக்கு அவசியமில்லை
வேற வேலை இருக்கு
என்ன வேலை மாமா
இனி பல பேருடைய வாழ்கையில்
ஒளி ஏத்தனும்...



1 Comments:

Blogger சிதறல் said...

நன்றி காண்டீபன்.

September 30, 2006 12:01 PM  

Post a Comment

<< Home