...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Saturday, September 23, 2006

என்னவனே...

நெடுந்தூர பயணத்துக்கு...
நான் போய் தான் ஆக வேண்டும்...
சீக்கிரம் திரும்பி விடுவேன் என்று கூறி...
நீ கிளம்பி போய் விட்டாய்...

நாட்கள் கழிந்தன...
நான் உன்னை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்...
நீ வரவில்லை... பிறகு
தொலை பேசியில்... தொடர்பு கொண்டு
இன்னும் கொஞ்ச நாட்கள்...
இங்கேயே இருக்கும்படி ஆகிவிட்டது...
வந்து விடுவேன் என்றாய்

எப்பொழுது என்று கேட்டேன்
விரைவில்... என்று கூறினாய்
இல்லை... வந்து விடு...
திரும்பும் தேதி சொல் என்று
திரும்ப...திரும்ப...கத்தினேன்...

உனக்கு கோபம் வந்து...
தெரியாது... தெரிந்தால் கூறமாட்டேனா...
இப்பொழுது என்ன வந்துவிட்டது
அங்கே இருந்தால் மட்டும் என்ன

இப்போது கூட பார்...
எப்போதும் நீ திட்டி,கத்தி கொண்டு தானே இருக்கிறாய்...
எங்கே இருந்தால் என்ன? என்ன வித்தியாசம்?
என்று நொடிபொழுதில் சொல்லி
நீ தொலைபேசியை துண்டித்து விட்டாய்...

ஆம்... நிஜம் தான்... ஆனால்...
எனக்கு தான் என்ன வித்தியாசம்
என்று சொல்ல தெரியவில்லை
ஆனால் ஒன்று மட்டும் எனக்கு
தெள்ள தெளிவாக தெரிகிறது
எனக்கு நீ வேண்டும்..

என் கூட சிரித்து பேச அல்ல,
அடித்து விளையாட அல்ல,
சண்டை போட அல்ல,
சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட அல்ல,
பகிர்ந்து கொள்ள அல்ல,
தோள் கொடுக்க அல்ல,
அரவணைக்க அல்ல

பின்னே எதற்காக என்று நானே
என்னை கேட்டு கொள்கிறேன்
தெரியவில்லை...
எதற்காக என்று எனக்கு தெரியவில்லை...

எனக்கு கைகள் நடுங்கி கொண்டு,
கால்கள் தளர்ந்து கொண்டு,
நெஞ்சு கனத்து கொண்டு,
தொண்டை அடைத்து கொண்டு,
கண்கள் இருட்டி கொண்டு,
வாயில் வார்த்தை சிக்கி கொண்டு

இல்லை... எனக்கு சொல்ல தெரியவில்லை...
கண்களில் இருந்து கண்ணீர் தான்...
அருவி மாதிரி கொட்டுகிறது...
இல்லை... தெரியவில்லை...
என்ன வித்தியாசம்...
எதற்காக... என்று சொல்ல
எனக்கு...தெரியவில்லை..
என்னவனே, நான் என் செய்வேன்???

...சிதறும் :-(



2 Comments:

Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

இவ்வளவு கதறியும் அவன் வரவில்லையா..விட்டு விடுங்கள்

September 29, 2006 11:04 PM  
Blogger சிதறல் said...

அட,காதலிப்பவர்கள் சொன்னால் கேட்கவா செய்கிறார்கள் காத்திருப்பது சுகம் என்கிறார்கள், நினைத்து உருகுவது தனி இன்பம் என்கிறார்கள்.
என் செய்வது அவர்களுக்கு என்று தனி உலகம்!@#$*?

September 30, 2006 2:25 AM  

Post a Comment

<< Home