...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Sunday, January 07, 2007

துளி

சிப்பிக்குள் முத்தாவதற்கு
ஒரு துளி போதுமாம்
அட உன் ஒரு
துளி பார்வை கிடைத்ததால்
நான் இன்று புதிப்பிக்கபட்டு
புதியவனாய் மாறி
புனிதனானேன்



ஏன் எதற்கு எப்படி

என் மனதில்
ஏன் நீ எனக்காக பிறந்த
எதற்கு எனக்கே எனக்காக
எப்படி எனக்கு மட்டுமே
சொந்தமான என்று
கண் இமைக்கும் நேரத்தில் தோன்றியதோ



வாக்களிப்பு

தேர்தல் , எங்கு பார்த்தாலும்
சிந்திப்பீர் வாக்களிப்பீர்!
நான் சிந்திக்காமலேயே
வாக்களித்துவிட்டேன் ! உனக்கு !



சிரிப்பு

நான் துவைக்கும் போது
வருகிற சோப்பு நுரைகள்
உன் வெள்ளை சிரிப்புகளை
அல்லவா ஞாபகபடுத்துகிறது



நன்றி

மூன்று எழுத்தை
சொல்லிவிட்டு போ என்றேன்
காதல் சொல்வாய் என்று எண்ணி
ஆனால் நீயோ நன்றி என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்



ஹோலி

வண்ண வண்ண ரங்கோலியை
போட்டு முடித்து விட்டாய்
எப்பொழுது நம் வாழ்கையை
ஹோலி ஆக்க போகிறாய்



முடி

கொண்டையாய் இருந்து கழண்டு
விழுகிற உன் முடி
செடியிலிருந்து விழும் பூவை
போல் அல்லவா இருக்கிறது



ஆச்சர்யம்

என்னை அப்படியே வரைந்து
காட்டமுடியுமா என்று நீ கேட்டாய்
நான் வரைந்ததை நீ ஆச்சர்யபட்டு
பார்த்து கொண்டிருந்தபோது
நானும் ஆச்சர்யபட்டு கொண்டிருந்தேன்
உன்னை பார்த்து



மௌனம்

நீ என் மீது கோபபட்டு
கத்தி ஏன் அடித்தால் கூட
எனக்கு வலிக்கவில்லை
உன் மௌனம் தான் என்னை கொல்கிறது



நினைவலைகள்

அலைகளை பார்த்தபடி
நான் அமர்கிற போது
என்னையும் அறியாமல் வந்து
என்னுடன் ஒட்டி கொள்கிறது
உன்னுடைய நினைவலைகள்